ADDED : ஆக 23, 2026 06:20 PM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் அடுத்த பஞ்சுகாளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ், 42; டிரைவர். இவர், மினி டெம்போ வேனில் புடவைகளை ஏற்றிக் கொண்டு நேற்று, சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்றார். காலை 11:00 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஓட்டல் முன் வைக்கப்பட்ட பேரிகார்டு மீது மோதாமல் இருக்க திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று வேனை மீட்டனர். இந்த இந்த விபத்தில் டிரைவர் தினேஷ், சிறு காயங்களின்றி தப்பினார். திருநாவலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
