/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஸ்டாலின் உடல் நலத்திற்கு வானதி 'அட்வைஸ்'
/
ஸ்டாலின் உடல் நலத்திற்கு வானதி 'அட்வைஸ்'
ADDED : ஏப் 24, 2025 07:20 AM
திருக்கோவிலுார் : முதல்வர் ஸ்டாலின் நல்ல உடல் நலத்தோடு இருக்க வேண்டும் எனில், அவர் தவறு செய்யும் அமைச்சர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி பேசினார்.
திருக்கோவிலுாரில், அமைச்சர் பொன்முடியின் பேச்சை கண்டித்து, பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி பேசியதாவது:
திராவிட பாரம்பரியத்திலேயே பெண்களை கொச்சையாகவும், ஆபாசமாகவும் பேசுவது தான் வரலாறு, பண்பாடு. அமைச்சர் பொன்முடி நமக்கு தலைக்குனிவை கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவர் தமிழகத்திற்கு அமைச்சராக இருக்கக்கூடாது.
அவரின் பேச்சு நமது நாட்டின் சட்ட பிரிவுகளுக்கு எதிரானது. அவர் மீது இதுவரை ஏன் வழக்கு பதியவில்லை என்பது தான் பா.ஜ., வின் கேள்வி. அமலாக்கத்துறை 'ரெய்டு' என்பது சட்ட விரோதம் அல்ல. சட்டத்திற்கு உட்பட்டது என்று தி.மு.க., அரசுக்கு மீண்டும் முகத்தில் அடித்தது போன்று ஐகோர்ட், ஒரு தீர்ப்பை கொடுத்திருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் காலையில் துாங்கி எழுந்தால், எந்த அமைச்சர் என்ன பேசுகிறார் என்ற பதைபதைப்போடுதான் எழுந்திருக்க வேண்டியுள்ளது என கூறுகிறார். அவர் நல்ல உடல் நலத்தோடு இருக்க வேண்டும் எனில், தவறு செய்யும் அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள். இவ்வாறு வானதி பேசினார்.

