தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வி.ஏ.ஓ., சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

 வி.ஏ.ஓ., சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

 வி.ஏ.ஓ., சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜன 31, 2026 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 07:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர்கள் நேற்று திருக்கோவிலார் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கிராம நிர்வாக அலுவலகத்தை குடிநீர், இணைய வசதி, கழிப்பறை வசதிகளுடன் நவீன மயமாக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில அளவிலான தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இதன் ஒரு பகுதியாக திருக்கோவிலுார் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட துணை தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் இளம்பரிதி முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us