/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
/
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 14, 2025 03:38 AM

கள்ளக்குறிச்சி : நிறைமதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் கடந்த 12ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து புண்ணியாவாசனம், பஞ்சகவ்யா பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்பனம், மிருத்சங்கிரஹணம், முதல் கால பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று காலை கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், தத்துவார்ச்சனை, மகா பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது. காலை 7.30 மணிக்கு, கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.