ADDED : ஆக 08, 2025 09:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்; சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி நோன்பு விரத பூஜை நடந்தது.
கோவிலில் நேற்று காலை 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கன்னிகா பரமேஸ்வரி அம்மனை தங்கத்தேரில் அமைத்து, மஞ்சளால் கவுரி தேவி, விநாயகரை ஆவாஹனம் செய்து பெண்கள் பூஜை செய்தனர். நோம்பு கயிறு கட்டிக் கொண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து வரலட்சுமி கதை கூறி பூஜைகளுக்குப்பின் மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது.

