/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஸ் நிலைய அடிக்கல் நாட்டு விழா வசந்தம் கார்த்திகேயன் அழைப்பு
/
பஸ் நிலைய அடிக்கல் நாட்டு விழா வசந்தம் கார்த்திகேயன் அழைப்பு
பஸ் நிலைய அடிக்கல் நாட்டு விழா வசந்தம் கார்த்திகேயன் அழைப்பு
பஸ் நிலைய அடிக்கல் நாட்டு விழா வசந்தம் கார்த்திகேயன் அழைப்பு
ADDED : ஜூன் 28, 2025 12:50 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ரூ.16.21 கோடி மதிப்பில் புறநகர் பஸ் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 7:00 மணிக்கு, நடக்க உள்ளதாக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு:
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், மாவட்டத்தில் எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புறநகர் பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள், வியாபாரிகளின் நீண்ட நாள் கனவாக இருந்தது. அதை நிஜமாக்கும் வகையில் ரூ.16.21 கோடியில் புறநகர் பஸ்நிலையம் அமைக்க கடந்த சட்டசபையில் அறிவிப்பு வெளியானது.
இதற்காக ஏமப்பேர் புறவழிச்சாலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று காலை 7:00 மணிக்கு, அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. மேலும், நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.21 கோடி மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி பணிகள்; ரூ.9.9 கோடி மதிப்பில் தினசரி நாளங்காடி பணிக்கும் அடிக்கல் நாட்டப்படுகிறது.
அமைச்சர் வேலு அடிக்கல் நாட்டி, ரூ.46.30 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைக்க உள்ளார். விழாவில் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், அனைத்து சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.