/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேகளீச பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா
/
தேகளீச பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா
ADDED : பிப் 17, 2024 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார : ரதசப்தமியை முன்னிட்டு திருக்கோவிலுாரில் தேகளீச பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா நடந்தது.
அதனையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாத சேவை, 5:30 மணிக்கு நித்திய பூஜை, 7:30 மணிக்கு தேகளீசபெருமாள் சூரிய பிரபை வாகனத்தில், ரத்தினங்கி சேவையில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.
ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜன்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.