/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் ரூ.40.53 கோடிக்கு காய்கறி விற்பனை
/
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் ரூ.40.53 கோடிக்கு காய்கறி விற்பனை
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் ரூ.40.53 கோடிக்கு காய்கறி விற்பனை
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் ரூ.40.53 கோடிக்கு காய்கறி விற்பனை
ADDED : ஜன 20, 2025 04:23 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் கடந்தாண்டு ரூ.40.53 கோடிக்கு காய்கறி கள் விற்பனையாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் விளைவிக் கும் காய்கறிகளை அவர்களே விற்பனை செய்வதற்காக கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் கடந்த 2000ம் ஆண்டு உழவர் சந்தை துவக்கப்பட்டது. 90 கடைகள், 60 தரை கடைகள் உள்ள இந்த உழவர் சந்தையில் 550 விவசாயிகள் பதிவு செய்து தினசரி விளை பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், மகளிர் சுயஉதவிக்குழுவினர் மூலமாக மலை காய்கறிகளும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இங்கு தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி, பழங்களின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவுபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
தினசரி காலை, மாலை என இரு வேளை நடக்கும் இந்த சந்தையில் கடந்த 2024 ஜன.1 முதல் டிச.31ம் தேதி வரை ஓராண்டில் 42 ஆயிரத்து 911 விவசாயிகள் மூலம் 7 ஆயிரத்து 160 டன் பசுமை காய்கறிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் 657 டன் மலை காய்கறிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 817 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 15 லட்சத்து 28 ஆயிரத்து 563 நுகர்வோர்களும் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் ரூ.40 53 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.