/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிற்கும் வாகனங்களால் பாதிப்பு! கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
/
பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிற்கும் வாகனங்களால் பாதிப்பு! கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிற்கும் வாகனங்களால் பாதிப்பு! கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிற்கும் வாகனங்களால் பாதிப்பு! கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
ADDED : ஜன 22, 2025 11:41 PM

கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் வருகைகளுக்குகேற்ப இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறுகிய இடமாக இருந்ததால் பஸ் நிலையத்தில் அனைத்து பஸ்களும் நிற்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பஸ் நிலையத்திற்கு உள்ளே, வெளியே செல்லும் வழிகள் வரை பஸ்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்னரை ஏக்கருக்கும் மேலான இடவசதியுடன் கூடிய வகையில் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. பஸ் நிலையத்தில் தரைத்தளம் மற்றும் பஸ்கள் நிற்பதற்கான தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட வடக்கு திசை பகுதியில் சென்னை, திருக்கோவிலுார், திருவண்ணாமலை என அந்தந்த ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் தடுப்பு கட்டைகளில் நிறுத்தப்படுவதில்லை. மாறாக தடுப்பு கட்டைக்கு முன்பாக நடுவிலேயே பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
சேலம் மார்க்கம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்துமிடம் நுழைவு வாயிலை ஒட்டியவாறு இருப்பதால், வாகனங்கள் அணிவகுத்து அவ்வப்போது பஸ்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால்பஸ் நிலையம் இட நெருக்கடியுடன் காணுவதுடன், பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் வெளிபுறம் சாலையிலும் பஸ்கள் அணிவகுத்து நிற்கிறது.
பஸ் நிலைய தடுப்பு கட்டைகளில் பஸ்கள் நிறுத்தபடாதது கடும் போக்குவரத்து வாகன நெரிசல் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. தற்போது பஸ் நிலைய தடுப்பு கட்டைகள் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு சென்று திரும்பும் கூலி தொழிலாளர்கள் பலர் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.
இடநெருக்கடியால் அவ்வப்போது பயணிகள் மீது பஸ் மோதி விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. விபத்தில் ஒரு சிலர் இறந்து போன சம்பவமும் நிகழ்ந்துள்ளது. எனவே, பஸ் நிலையத்தில் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டு பஸ்கள் அனைத்தும் ஒதுக்கப்பட்டுள்ள உரிய இடத்தில் நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.