ADDED : மே 22, 2025 11:42 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த வேல்பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரையில் வரும் ஜூன் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதையொட்டி ஹிந்து முன்னணி சார்பில், வேல் பூஜை நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் அருண், அசோக் முன்னிலை வகித்தனர்.
ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். பல்லகச்சேரி மின்னல் காளி கோவில் அடிகளார் சக்திவேல் ஆசி வழங்கினார்.
மாநில செயலாளர் மனோகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், 'மதுரையில், படைவீடுகளின் முருக கடவுள்களை பாதுகாக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அதற்கான மாநாட்டில், 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்கின்றனர். கள்ளக்குறிச்சியிலிருந்து, பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்க வேண்டும்,' என்றார்.
வரதராஜன் குருக்கள், விஷ்ணு குருக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் முத்துராமலிங்கம், பாலகிருஷ்ணன், மணிகண்டன், அன்பழகன், சதீஷ், சுப்ரமணி, வெங்கடேசன், குமார், மதன் உள்ளிட்டோர் செய்தனர்.