/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டையில் வேல் பூஜை
/
உளுந்துார்பேட்டையில் வேல் பூஜை
ADDED : ஜூன் 12, 2025 12:36 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் வேல்பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரையில் வரும் 22ம் தேதி நடக்க உள்ள முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி, உளுந்துார்பேட்டையில், தனியார் திருமண மண்டபத்தில், ஹிந்து முன்னணி சார்பில் வேல்பூஜை நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல், நிர்வாகி மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலுார் ஞானகுரு சங்கரன் குருபீடம் சங்கரானந்த சரஸ்வதி சுவாமி ஆசி வழங்கினார். மாநில செயலாளர் சனில்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
முன்னதாக உளுந்துார்பேட்டை, முருகன் கோவிலில் இருந்து 5 அடி உயர பஞ்சலோக வேலிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டது.