/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அதி நவீன வசதிகளுடன் வெங்கடேசா பல் மருத்துவமனை திறப்பு விழா
/
அதி நவீன வசதிகளுடன் வெங்கடேசா பல் மருத்துவமனை திறப்பு விழா
அதி நவீன வசதிகளுடன் வெங்கடேசா பல் மருத்துவமனை திறப்பு விழா
அதி நவீன வசதிகளுடன் வெங்கடேசா பல் மருத்துவமனை திறப்பு விழா
ADDED : செப் 05, 2025 09:46 PM

சங்கராபுரம்:
சின்னசேலத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வெங்கடேசா பல் மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.
சின்னசேலம் மூங்கில்பாடி சாலையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வெங்கடேசா பல் மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.
தமிழ்நாடு பல் மருத்துவ சங்க செயலாளர் செந்தாமரை கண்ணன், வெங்கடேசா டிம்பர்ஸ் நிறுவனர் ராஜா ஆகியோர் மருத்துவமனையை திறந்து வைத்தனர்.
டாக்டர் வெங்கடேசன் வரவேற்றார். குழந்தைகளுக்கான சிறப்பு பல் மருத்துவ அறையை வெல்டன் மெட்ரிக் பள்ளி தாளாளர் செந்தில்குமார், பல் எக்ஸ்ரே மிஷனை லயன் சங்க தேர்வு கவர்னர் கனகதாரன் ஆகியோர் திறந்து வைத்தனர். கள்ளக்குறிச்சி பல் மருத்துவ சங்க தலைவர் லட்சுமிபிரியா வாழ்த்துரை வழங்கினார்.
இதில் மல்லிகா, தேவிகா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். நிகழ்ச்சியில் டாக்டர்கள் மணிவண்ணன், திருஞானசம்பந்தம், கதிரவன், விஸ்வநாதன், கோபி, வினோத், பிரவீன், கோகுல், ரஞ்சித், அருண், சுரேந்திரன், ரேகா, வழக்கறிஞர் ரவி மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மருத்துவமனையில் 13 ஆண்டுகள் அனுபவம் பெற்ற மருத்துவர்கள், அதிநவீன கருவிகளுடன் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. கண்களுக்கு தெரியாத பிலிப் சிகிச்சை, குழந்தைகளுக்கு சிறப்பு பல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது என மருத்துவமனை உரிமையாளர்கள் வெங்கேடசன், பிரித்தி ஆகியோர் தெரிவித்தனர்.