ADDED : ஜூலை 04, 2026 05:40 AM
புராண இதிகாச தலமாக இங்குள்ள வேணுகோபாலன் சன்னதி பழம்பெரும் சிறப்புடன் விளங்கிக் கொண்டிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வேணுகோபாலன் சன்னதிதான் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டது.
இதனை புராணங்களில் பஞ்சகிருஷ்ணரண்ய ஷேத்ரம் என அழைக்கப்படுகிறது.
அதன்பிறகே திருவிக்ரமன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் விமானங்கள், கோபுரங்கள் என பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு அரசர்களாள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கோவிலில் நுழைந்தவுடன் வலப்பக்கத்தில் வேணுகோபாலன் சன்னதி உள்ளது. சத்யபாமா, ருக்மணி சமேத வேணுகோபாலனாக, சாலிகிராமத் திருமேனியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்காலங்களில் இங்கிருந்துதான் பெருமாள் எழுந்தருள்கிறார். ஸ்ரீ வேணுகோபாலன் திருமேனி கலைநுணுக்கத்துடன் வேறு எங்கும் பார்த்திராத வகையில் அழகுற அருள்பாலிக்கிறார்.
