ADDED : ஏப் 26, 2025 06:22 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் வேளாண் கல்லுாரி மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தாகம்தீர்த்தாபுரம் கிராமத்தில் பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லுாரி மாணவர்கள் தங்கி, கிராமப்புற வேளாண் வளர்ச்சி மற்றும் கால்நடை பராமரிப்பு திட்ட முகாம் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் விவசாய நிலங்களில் இயற்கை முறையிலான வேளாண் பயிர்கள் சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, கிராமத்தில் கால்நடை மருத்துவமனையில் நடந்த கால்நடை சிறப்பு முகாமில் பங்கேற்றனர்.
அதில் கால்நடைக்கான குடற்புழு நீக்கம், கருத்தரித்தலுக்கான சினை ஊசி, கால்நடைகள் பராமரிப்பு தொடர்பாக விழிப்புணர்வு பயிற்சி மேற்கொண்டனர்.
இதில் கால்நடை டாக்டர்கள் பேபி, மூர்த்தி மற்றும் வேளாண் கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

