/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரங்கப்பனுார் ஊராட்சியில் துணை தலைவர் தேர்வு
/
ரங்கப்பனுார் ஊராட்சியில் துணை தலைவர் தேர்வு
ADDED : ஜூலை 26, 2025 08:08 AM
மூங்கில்துறைப்பட்டு : ரங்கப்பனுார் ஊராட்சியில் துணை தலைவருக்கான தேர்தலில் 9 வார்டு உறுப்பினர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் ஊராட்சியில் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று காலை நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில், ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமராஜன் முன்னிலையில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 9வது வார்டு உறுப்பினர் விருதாம்பாளை, உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்வு செய்தனர்.
விருதாம்பாள் வெற்றி பெற்றதற்கான சான்றிழ் வழங்கப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரியதர்ஷினி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் இளங்கோ, சக்திவேல், கணபதி மற்றும் ஊராட்சி செயலாளர் திரு மாவளவன் உடனிருந்தனர்.