/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை
/
வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை
வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை
வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை
ADDED : மே 21, 2025 12:15 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் சந்தைப்பேட்டை, வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் ராகுல், 482 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் சிறப்பிடம் பிடித்தார். அதேபோல் பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வில் மாணவி சுபஸ்ரீ, 477 மதிப்பெண் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பிடித்தார்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் மகாவீர்சந்த், செயலாளர் மதிவாணன், பொருளாளர் விமல் குமார், தாளாளர் சுனில் குமார், அறக்கட்டளை உறுப்பினர் ரிங்கு சுனில்குமார், ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர்.
மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர் அருள், துணை முதல்வர் ஞானசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாவதி, வித்யா ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.