/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வித்யாலட்சுமி உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'
/
வித்யாலட்சுமி உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'
வித்யாலட்சுமி உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'
வித்யாலட்சுமி உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'
ADDED : மே 19, 2025 06:30 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி வித்யாலட்சுமி உயர்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி, பசுங்காயமங்கலம் சாலையில் உள்ள வித்யாலட்சுமி உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர்.
மாணவி வான்மதி 487 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களை பள்ளி தாளாளர் ஹேமலதா வாசுதேவன், முதல்வர் ஜெயராமன் ஆகியோர் பாராட்டினர். இப்பள்ளி, கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பள்ளி தாளாளர் கூறுகையில், 'அனைத்து வழித்தடங்களுக்கும் பஸ் வசதி கொண்ட பள்ளியில் தற்போது எல்.கே.ஜி. முதல் 10ம் வகுப்பு வரை அட்மிஷன் நடக்கிறது. சிலம்பம், வாள் பயிற்சி, வில்வித்தை போன்ற தற்காப்பு பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது,' என்றார்.