/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் பள்ளியில் விஜயதசமி
/
ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் பள்ளியில் விஜயதசமி
ADDED : அக் 03, 2025 11:30 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜய தசமி விழா கொண்டாடப்பட்டது.
கல்வி நிறுவன தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். பள்ளி தலைவர் டாக்டர் மணிவண்ணன், தாளாளர் டாக்டர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். பள்ளி துணை தலைவர் டாக்டர் நளினி, கல்வி நிறுவனங்களின் செயலாளர் கோவிந்தராஜ், துணை தலைவர் ரவிசங்கர், நிர்வாக அலுவலர் மோகன சுந்தர் வாழ்த்துரை வழங்கினர். பாரம்பரிய முறைப்படி விஜயதசமி தினத்தில், நெல் மணியில் எழுதி சேர்க்கை நடந்தது. நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பொறுப்பாசிரியர் ராகேல் ஜாய்ஸ் மேரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.