/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 07, 2025 11:38 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கருணாநிதி தலைமை தாங்கினார். வட்ட துணை தலைவர் தனபால், பொருளாளர் அலமு முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார். வட்ட தலைவர் ஞானபிரகாஷ் கண்டன உரையாற்றினார்.
வி.ஏ.ஓ.,க்களின் கல்வித்தகுதியை பட்டப்படிப்புக்கு உயர்த்தி அரசாணை வெளியிடுதல், 10 மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்த வி.ஏ.ஓ.,க்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை என பெயர் மாற்றம் செய்து, அதற்கேற்ப ஊதியம் வழங்குதல், பட்டா மாறுதல் பரிந்துரை உத்தரவை செயல்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட இணை செயலாளர் வசந்த் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.