/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 22, 2024 06:07 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாகஅலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கூடுதல் பணிச்சுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொருளாளர் ரஞ்சித்குமார் தலைமைதாங்கினார்.
மாவட்ட செயலாளர் வரதராஜன், மாவட்டஇணைச் செயலாளர் நாகராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட பொருப்பாளர்கள் ஜீவ ஆனந்தம், கோவிந்தன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் வினோத்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட வேளாண் துறையின் பணியான டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அவரவர் துறை சார்ந்த பணிகளை அவர்களுக்கே வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.