/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிராம அறிவு மைய கட்டுமான பணி பூஜை
/
கிராம அறிவு மைய கட்டுமான பணி பூஜை
ADDED : பிப் 16, 2025 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.1.27 கோடி மதிப்பில் கிராம அறிவு மையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். உதயசூரியன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். பின், இருவரும், கிராம அறிவு மையம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினர். 2 தளங்கள் கொண்ட புதிய கட்டடத்தில் கணினி அறை, நுாலக அறை, அலுவலக அறை, மேடை, விவசாயிகளுக்கான பயிற்சி மையம், சுய உதவிக்குழு நிர்வாக மற்றும் கண்காட்சி அறை ஆகியவை அமைக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

