/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
20 மணி நேர மின்தடையால் இருளில் மூழ்கிய கிராமம் பொதுமக்கள் கடும் அவதி

ADDED : ஜூலை 02, 2025 07:54 AM
ரிஷிவந்தியம் : சூளாங்குறிச்சியில் டிரான்ஸ்பார்மர் பழுது காரணமாக திடீர் மின் தடை ஏற்பட்டதால், நேற்று முன்தினம் இரவு துாக்கம் இன்றி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
வாணாபுரம் அருகே சூளாங்குறிச்சி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு மின்சாரம் விநியோகிக்கும் வகையில் நடு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் டிரான்ஸ்பார்மரில் திடீரென பழுது ஏற்பட்டதால் மின்சாரம் நின்றது.
தொடர்ந்து, இரவு முழுவதும் மின் தடை சரிசெய்யாததால், துாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர். பழுதான டிரான்ஸ்பர் சரிசெய்யும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர். நேற்று இரவு 7:00 மணியை தாண்டியும் மின் தடை சீராகவில்லை. 20 மணி நேரம் நீடித்த மின் தடையால் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.