/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பயணிகள் நிழற்குடை அமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல்
/
பயணிகள் நிழற்குடை அமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல்
பயணிகள் நிழற்குடை அமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல்
பயணிகள் நிழற்குடை அமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : செப் 27, 2025 02:27 AM

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து தரக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம் அடுத்த மயிலாம்பாறை பஸ் ஸ்டாப்பில் ரோட்டரி கிளப் சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை கட்டிதரப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்தது. கடந்த ஜன., மாதம் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை நான்கு வழிச்சாலை பணியில், சாலை விரிவாக்கத்திற்காக பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது.
தற்போது அப்பகுதியில் நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்துள்ளது. இந்நிலையில் வடசெட்டியந்தல், மஞ்சப்புத்துார் ஆகிய கிராம மக்கள் பஸ்சுக்காக காருக்கும் போது பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர். பயணிகள் நிழற்குடை இல்லாததால், பஸ்சுக்காக காத்திருக்கும் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இடிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுவரை பயணிகள் நிழற்குடை அமைக்கவில்லை. இதனை கண்டித்து, நேற்று பகல் 12:00 மணிக்கு,கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் மற்றும் தாசில்தார் வைரக்கண்ணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கூறி, பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று 12.35 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.