/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ராகவன் வாய்க்கால், மலட்டாற்றில் நீந்தி சென்று உடலை அடக்கம் செய்யும் வடமருதுார் கிராம மக்கள்
/
ராகவன் வாய்க்கால், மலட்டாற்றில் நீந்தி சென்று உடலை அடக்கம் செய்யும் வடமருதுார் கிராம மக்கள்
ராகவன் வாய்க்கால், மலட்டாற்றில் நீந்தி சென்று உடலை அடக்கம் செய்யும் வடமருதுார் கிராம மக்கள்
ராகவன் வாய்க்கால், மலட்டாற்றில் நீந்தி சென்று உடலை அடக்கம் செய்யும் வடமருதுார் கிராம மக்கள்
ADDED : செப் 29, 2025 01:03 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த வடமருதுார் உள்ளிட்ட 4 கிராம மக்கள், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆற்றில் நீந்தி செல்லும் அவலத்திற்கு தீர்வு காணும் வகையில், பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருக்கோவிலுார் அடுத்துள்ள வடமருதுார் ஊராட்சியின் கிளை கிராமங்களாக சுந்தரேசபுரம், கத்தாழந்திட்டு, மேட்டு காலனி பகுதிகள் உள்ளது. 2500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறப்பவர்களின் சடலங்கள் சுந்தரேசபுரம் சுடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கம்.
சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் ராகவன் வாய்க்கால், மலட்டாறு உள்ளது. தென்பெண்ணையாற்றில் தண்ணீர் செல்லும் போது திருக்கோவிலுார் அணைக்கட்டிலிருந்து திருப்பி விடப்படும் தண்ணீர் இந்த கால்வாய் வழியாக செல்வதால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆபத்தான வகையில் தண்ணீரில் நீந்தி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.
எனவே ராகவன் வாய்க்கால், மலட்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் எனக் கோரி பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தொகுதி எம்.எல்.ஏ., பொன்முடியிடமும் நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று முன்தினம் வடமருதுாரைச் சேர்ந்த முருகன், 50; உடல்நிலை பாதிப்பால் இறந்தார். இவரது உடலை ராகவன் வாய்க்கால் மற்றும் மலட்டாற்றில் செல்லும் இடுப்பளவு தண்ணீரில் நீந்தியவாறு எடுத்துச் சென்று, அடக்கம் செய்தனர். இச்சிரமம் சுடுகாட்டுக்கு செல்வது மட்டுமின்றி, அப்பகுதியில் இருக்கும் 250 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிர் செய்து அறுவடை செய்து வருவதிலும் ஏற்படுகிறது.