/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாவளம் கிராமம் தனி ஊராட்சியாக்க எம்.எல்.ஏ., விடம் கிராம மக்கள் மனு
/
பாவளம் கிராமம் தனி ஊராட்சியாக்க எம்.எல்.ஏ., விடம் கிராம மக்கள் மனு
பாவளம் கிராமம் தனி ஊராட்சியாக்க எம்.எல்.ஏ., விடம் கிராம மக்கள் மனு
பாவளம் கிராமம் தனி ஊராட்சியாக்க எம்.எல்.ஏ., விடம் கிராம மக்கள் மனு
ADDED : செப் 29, 2025 01:04 AM
சங்கராபுரம்: பாவளம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி எம்.எல்.ஏ.,விடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
சங்கராபுரம் அடுத்த பாவளம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என அக்கிராம மக்கள் உதயசூரியன் எம்.எல்.ஏ.,விடம் அளித்த மனுவில்; சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேரந்தது பூட்டை ஊராட்சி. இவ்வூராட்சியில் துணை கிராமமாக பாவளம் கிராமம் இணைந்துள்ளது.
பூட்டையிலிருந்து பாவளம் கிராமம் 3 கி.மீ., தொலைவில் உள்ளதால், அடிப்படை தேவைகளுக்கு பொதுமக்கள் வெகுதுாரம் கடந்து செல்ல வேண்டி உள்ளது. கிராம மக்கள் ஊராட்சி தலைவரை அணுகவும், கோரிக்கை மனு கொடுக்கவும், கிராம குறைபாடுகளை தெரிவிக்க வெகு துாரம் பயணிக்க வேண்டி உள்ளது.
இதனால் கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே பாவளம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.மனுவை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ., உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.