ADDED : ஆக 29, 2025 02:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்:சூளாங்குறிச்சியில் விநாயகர் சுவாமி வீதியுலா நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் அரச மர இரட்டை பிள்ளையார் மற்றும் நடுத்தெரு விநாயகர் கோவில் உள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்று முன்தினம் 2 கோவில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
அரச மர இரட்டை பிள்ளையாருக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அரச மரம் பகுதி, நடு பஸ் நிலையம் மற்றும் கெங்கையம்மன் கோவில் அருகே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு உற்சவர் விநாயகர் சுவாமி வீதியுலா நடந்தது.

