/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் விநாயகர் சிலைகள் அல்லித் தாமரை ஏரியில் விஜர்சனம்
/
திருக்கோவிலுார் விநாயகர் சிலைகள் அல்லித் தாமரை ஏரியில் விஜர்சனம்
திருக்கோவிலுார் விநாயகர் சிலைகள் அல்லித் தாமரை ஏரியில் விஜர்சனம்
திருக்கோவிலுார் விநாயகர் சிலைகள் அல்லித் தாமரை ஏரியில் விஜர்சனம்
ADDED : ஆக 29, 2025 11:59 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், அரகண்டநல்லுார் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரகண்டநல்லுார் அல்லித் தாமரை ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருக்கோவிலுார், மணம்பூண்டி, தேவனுார், அரகண்டநல்லுார் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி ராமமூர்த்தி தலைமையில், ஐந்து முனை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை பூஜைகள் செய்யப்பட்டு பகல் 12:30 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது.
தொழிலதிபர்கள் முரளி, கணேஷ், ஐ.ஜெ.கே., மாவட்டத் தலைவர் செந்தில்குமார், ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் கலிவரதன், சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் ராதாகிருஷ்ணன், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன், நகர செயலாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட விநாயகர் சிலை அமைப்பாளர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
கிழக்கு வீதி, ஏரிக்கரை மூலம், மேலவீதி, வடக்கு வீதி, பிடாரி அம்மன் கோவில் வீதி வழியாக உயர்மட்ட பாலத்தின் மீது சென்று விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி, தேவனுார் கூட்டு சாலை வழியாக ஊர்வலம் சென்றது. இதில், 15க் கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பங்கேற்றது.
மதியம் 2:30 மணி அளவில் அரகண்டநல்லுார் அல்லித் தாமரை ஏரியில் ஊர்வலம் நிறைவடைந்து, சிலைகள் பாதுகாப்பாக ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது. திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் விநாயகர் சிலைகளை ஏரியில் விஜர்சனம் செய்தனர். திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்தீபன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

