/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீராணம் ஏரி பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
/
வீராணம் ஏரி பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
ADDED : அக் 17, 2024 12:26 AM
காட்டுமன்னார்கோவில் : வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி, வீராணம் ஏரியின் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வீராணம் ஏரி 1.46 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது. இதில் தற்போது 45.75 அடி (1039.17 மில்லியன் கன அடி) தண்ணீர் உள்ளது.
கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 600 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. ஏரியில் இருந்து பாசனத்திற்கு 30 கன அடி, பூதங்குடி வி.என்.எஸ் மதகு வழியாக 388 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சென்னை குடிநீருக்கு 68 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
வடக்கிழக்கு பருவ மழை தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், கீழணை வடிநிலக் கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், நேற்று வீராணம் ஏரியின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.
ராதா மதகு, வி.என்.எஸ். மதகு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். உதவி பொறியாளர் சிவராஜ், ஆய்வாளர் மோகனபிரியா உள்ளிட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.