/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
/
விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
ADDED : டிச 27, 2024 07:06 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
தியாகதுருகம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார்.
மாவட்ட இணை செயலாளர்கள் பிரேம்குமார், வேலு, மாவட்ட பொருப்பாளர்கள் - திருக்கோவில் திருமடங்கள் பிரிவு சிவக்குமார், பசு பாதுகாப்பு பிரிவு திருமாலழகன், மாத்ருசக்தி பிரிவு அமுதா, மங்கலம், துர்காவாகினி பிரிவு மலர், ஜெயந்தி, தேவி முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் ராமன் சிறப்புரையாற்றினார்.
மதமாற்றத்தை தடுத்து, மாறியவர்களை தாய் மதத் திற்கு திரும்ப விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து ஒன்றியங்களிலும் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்.
தைப்பொங்கல் திருநாளில் பட்டியலின மக்கள் வாழக்கூடிய பகுதிகளில் சமுதாய நல்லிணக்க பொங்கல் வைத்து, கோபூஜை செய்ய வேண்டும். கிராம கோவில் பூஜாரிகளுக்கு நலவாரிய கார்டு வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் சிவராஜ் நன்றி கூறினார்.