/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விஸ்வகர்மா ஜெயந்தி விழா சுவாமி ஊர்வலம்
/
விஸ்வகர்மா ஜெயந்தி விழா சுவாமி ஊர்வலம்
ADDED : செப் 18, 2025 11:00 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி சுவாமி வீதியுலா உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கரியப்பா நகர் விஸ்வகர்மா கோவிலில் மூன்றாமாண்டு விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி சுவாமி ஊர்வலம் நடந்தது. பிரம்ம அலங்காரத்தில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விஸ்வகர்ம சுவாமியை எழுந்தருள செய்தனர். தொடர்ந்து கரியப்பா நகரில் இருந்து சித்தேரிக்கரை, மந்தைவெளி, காந்திரோடு, நான்குமுனை சந்திப்பு, சேலம், ஏமப்பேர் ஸ்கூல் தெரு உள்ளிட்ட தேரோடும் வீதிகள் வழியாக சுவாமி வீதியுலா உற்சவம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஸ்வகர்மா கொல்லு தச்சு கைவினைஞர்கள் நல முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.