/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
ADDED : டிச 26, 2025 05:01 AM
கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த நவ., 4 ம் தேதி துவங்கப்பட்டது.
இதில் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெற்று, அதனை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் மொபைல் ஆப்பில் பதிவேற்றம் செய்து, கடந்த 19 ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், வரும் 2026ம் ஆண்டு ஜன.,1 ம் தேதி அன்று 18 வயது நிறைவடையும் முதல் முறை வாக்காளர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள், தங்களது பெயரை சேர்க்க அல்லது பெயர், உறவுமுறை, முகவரி ஆகியவற்றை மாற்றம் செய்யும் பொருட்டு படிவங்கள் பெற வரும் 27, 28 ம் தேதி மற்றும் வரும் ஜன., 3,4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
இந்த முகாம்களில் பொதுமக்கள் நேரடியாக பங்கேற்று பயன்பெறலாம். மேலும் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவோ, நீக்கவோ, திருத்தம் மேற்கொள்ள https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

