/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாக்காளர் பட்டியல் பயிற்சி முகாம்
/
வாக்காளர் பட்டியல் பயிற்சி முகாம்
ADDED : ஜூன் 21, 2025 03:43 AM
கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்த அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பயிற்சி வகுப்புக்கு டி.ஆர்.ஓ., ஜீவா தலைமை தாங்கினார்.
அதில், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் செம்மைப்படுத்தும் பொருட்டு 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிப்பது, மறுசீரமைப்பது, 18 வயது பூர்த்தி அடைந்த அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க, சிறப்பு முகாம் மற்றும் 'ஸ்வீப்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திட பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஓட்டுச்சாவடி நிலை முகவர் 2 நியமனம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், தேர்தல் தொடர்பாக பயன்பாட்டில் உள்ள செயலிகள் மற்றும் மின் பொருட்களை பயன்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஓட்டுச்சாவடிகளில் ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, ஓட்டு பதிவு அலுவலர்கள், உதவி ஓட்டு பதிவு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.