ஓட்டுப்பதிவு இயந்திர செயல்விளக்க வாகன பிரசாரம் துவக்கம்
ஓட்டுப்பதிவு இயந்திர செயல்விளக்க வாகன பிரசாரம் துவக்கம்
ADDED : ஜன 29, 2026 06:59 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விழிப்புணர்வு பிரச்சார வாகன துவக்க நிகழ்ச்சி நடந்தது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் முறை, பதிவு செய்த ஓட்டு உறுதிப்படுத்தும் வி.வி.பேட்., இயந்திர செயல்பாடு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், திருக்கோவிலுார் தொகுதியில் செயல் விளக்க பிரச்சார வாகன சுற்றுப்பயணம் துவக்க நிகழ்ச்சி தாலுக்கா அலுவலகத்தில் நடந்தது.
சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங் தலைமை தாங்கி, பிரச்சார வாகன பயணத்தை துவக்கி வைத்தார். தாசில்தார் சரவணன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து சந்தப்பேட்டை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் செயல் விளக்க வாகனம் நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு ஓட்டளிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
