ஓட்டுப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு அறை : கலெக்டர் ஆய்வு
ஓட்டுப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு அறை : கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 20, 2026 06:00 AM

அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரம் தொகுதியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கும் அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கும் அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் நேற்று நேரில் ஆய்வு செய்தார். உடன் சங்கராபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிராஜூதீன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வைரக்கண்ணன், வாசுதேவன், தேர்தல் துணை தாசில்தார் கோதண்டராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
