தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாத யாத்திரை நிகழ்ச்சி 

 ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாத யாத்திரை நிகழ்ச்சி 

 ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பாத யாத்திரை நிகழ்ச்சி 


ADDED : மார் 25, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 03:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் இளைய பாரதம் சார்பில் எனது நாடு, எனது பொறுப்பு பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் அசோக் தலைமை தாங்கினார். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தனர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் வரவேற்று, பாதயாத்திரையை கொடியசைத்து துவங்கி வைத்தார்.

வணிக மேலாண்மை துறை தலைவர் ராஜா வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக முனைவர் ஜெயசீலன் பங்கேற்று நாட்டு விடுதலைக்காக போராடிய தேசத்தலைவர்களின் நினைவை போற்றும் நடக்கும் இந்நிகழ்ச்சியில், பகத்சிங், நேதாஜி, காந்தியடிகள் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறுகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என பேசினார். தொடர்ந்து, கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. உடற்கல்வி ஆசிரியர பிரேம்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us