/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து விரயமாகும் தண்ணீர்
/
கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து விரயமாகும் தண்ணீர்
கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து விரயமாகும் தண்ணீர்
கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து விரயமாகும் தண்ணீர்
ADDED : நவ 24, 2024 11:24 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் கசிந்து வீணாவதை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் இருந்து சின்னசேலம் வரை ரிஷிவந்தியம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ரிஷிவந்தியம், தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
திருக்கோவிலுார் அடுத்த சுந்தரேசபுரம் தென்பெண்ணையாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் எதிரே, குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வீணாகி வருகிறது.
இந்த பிரச்னை குறித்து அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால் வெகு தொலைவில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் அதிகளவில் வீணாகி வருகிறது.
தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.