/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நீர் மோர் பந்தல் த.வெ.க., திறப்பு
/
நீர் மோர் பந்தல் த.வெ.க., திறப்பு
ADDED : ஏப் 02, 2025 06:14 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மகப்பேறு பிரிவு அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் மற்றும் பழங்கள் வழங்கினார். மாவட்ட இணை செயலாளர் ராமு முன்னிலை வகித்தார்.
கட்சி நிர்வாகிகள் செல்வசுதா, ரவி, வரதன், திலீப்குமார், சந்துரு, கிேஷார்கான், கோவிந்தராஜ், ரவி, ரமேஷ், ஜெயபிரகாஷ், பாலாஜி, செல்வம், அறிவுமணி, தினேஷ், தமிழ்செல்வன், பர்ஜானபேகம், பஞ்சம்மாள் மற்றும் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டசபை தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.