தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மணிமுக்தா அணையில் இருந்து தண்ணீர் வௌியேற்றம்

 மணிமுக்தா அணையில் இருந்து தண்ணீர் வௌியேற்றம்

 மணிமுக்தா அணையில் இருந்து தண்ணீர் வௌியேற்றம்


ADDED : நவ 30, 2025 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம் (736.96 மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது.

கல்வராயன்மலை பகுதியில் பெய்யும் மழைநீர் மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக அணைக்கு வருகிறது. இதுதவிர, மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையில் இருந்தும் அணைக்கு தண்ணீர் வருகிறது. ஆண்டுதோறும் மழைக்காலத்தில் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, விவசாயத்திற்காக பாசன மதகு வழியாக திறந்து விடப்படுவது வழக்கம்.

தற்போது, அணையில் உள்ள பழைய ஷட்டர்கள் வலுவிழந்து, தண்ணீர் தாங்கும் திறன் குறைந்துள்ளதால், முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியாது. எனவே, 25 அடி உயரத்திற்கு மட்டும் தண்ணீர் தேக்கி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் சூளாங்குறிச்சி மணிமுக்தா அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி அணையில் 25 அடி உயரத்திற்கு (163.24) மில்லியன் அடி தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் நீர்வரத்தாக இருந்தது. இதனால், அணை பாதுகாப்பு கருதி வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் ஷட்டர்கள் வழியாக மணிமுக்தா ஆற்றில் நேற்று மாலை 5.30 மணியளவில் திறந்து விடப்பட்டது.

'டிட்வா' புயல் காரணமாக கனமழை பெய்தால், அணைக்கு வரும் நீர் வரத்து தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட உள்ளது. எனவே, மணிமுக்தா அணையின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us