/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோமுகி அணை பாசன கால்வாயில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு
/
கோமுகி அணை பாசன கால்வாயில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு
கோமுகி அணை பாசன கால்வாயில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு
கோமுகி அணை பாசன கால்வாயில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு
ADDED : ஜன 02, 2025 10:50 PM

தியாகதுருகம்; கோமுகி அணையின் பாசன கால்வாயில் இருந்து கணங்கூர் மற்றும் வேளாக்குறிச்சி ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்க நீர் கட்டமைப்பு வசதி செய்ய வேண்டும்.
இதன் மூலம், விவசாயம் செழிப்பதோடு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தேவை பூர்த்தியாகும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து பாசன கால்வாயில் இருந்து மின்மோட்டார் பொருத்தப்பட்ட குழாய் மூலம் கணங்கூர் மற்றும் வேளாக்குறிச்சி ஏரிகளுக்கு சோதனை அடிப்படையில் தண்ணீர் ஏற்றும் பணியை கலெக்டர் பிரசாந்த் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.
மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணை சேர்மன் நெடுஞ்செழியன், பி.டி.ஓ., க்கள் கொளஞ்சிவேல், செந்தில்முருகன், ஊராட்சித் தலைவர் ராணி எத்திராஜ், தங்கதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.