/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாத்தனூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தென் பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறப்பு
/
சாத்தனூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தென் பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறப்பு
சாத்தனூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தென் பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறப்பு
சாத்தனூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தென் பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறப்பு
ADDED : மார் 17, 2025 05:17 AM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளின் 2ம் போக சாகுபடிக்காக சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளின் 2ம் போக சாகுபடிக்கான உரிமை நீர் சாத்தனூர் அணையில் இருந்து நேற்று காலை 8:00 மணிக்கு, வினாடிக்கு 900 கன அடி வீதம் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டது.
வரும் 30-ம் தேதி வரை 14 நாட்களுக்கு தொடர்ந்து தினசரி 900 கன அடி வீதமும், அடுத்து 31ம் தேதியிலிருந்து ஏப்ரல் 1ம் தேதி வரை இரண்டு தினங்களுக்கு தினசரி 600 கன அடியும், 2ம் தேதியிலிருந்து 3ம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு 688 கன அடி நீர் என மொத்தம் 1200 மில்லியன் கன அடி நீர் 2ம் போக சாகுபடிக்கு திறக்கப்படவுள்ளது.
நேற்று காலை தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் மாலை அல்லது இரவு திருக்கோவிலூர் அணைக்கட்டை வந்தடையும் என பொதுப் பணித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப் படுகிறது.
வழக்கமாக அணையில் தண்ணீர் திறக்கப்பட்டால் திருக்கோவிலூர் அணைக்கட்டை வந்தடைய 24 மணி நேரமாகும். இச்சூழலில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் சீராக சென்று கொண்டிருக்கிறது. இதனால் தண்ணீர் வேகமாக வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருக்கோவிலூர் அணைக்கட்டில் இருந்து ராகவன் வாய்க்கால், மலட்டாறு, பம்பை வாய்க்கால்களில் தண்ணீர் திருப்பி விடப்படவுள்ளது.
பம்பை வாய்க்கால் பெஞ்சல் புயல் வெள்ளத்தில் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 2ம் போக சாகுபடிக்கு திறக்கப்படும் தண்ணீரை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், பொதுப்பணித்துறை போர்க்கால அடிப்படையில் இக்கால்வாயை சீரமைத்துள்ளது.
இதன் மூலம் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறும்.