/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நீர்வளத்துறை தயார்: கலெக்டர் தகவல்
/
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நீர்வளத்துறை தயார்: கலெக்டர் தகவல்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நீர்வளத்துறை தயார்: கலெக்டர் தகவல்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நீர்வளத்துறை தயார்: கலெக்டர் தகவல்
ADDED : டிச 01, 2025 05:16 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் நீர்வளத்துறையின் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; மழைகாலங்களில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு, நீர்வளத்துறையின் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயாராக உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர்வளத்துறை பராமரிப்பின் கீழ் 10 ஆறுகள் மற்றும் வெள்ளாறு வடிநில கோட்டத்தின் மூலம் 212 ஏரிகள், கீழ்பெண்ணையாறு வடிநில கோட்டத்தின் மூலம் 115 ஏரிகள், மத்திய பெண்ணையாறு வடிநில கோட்டத்தின் மூலம் 10 ஏரிகள் என மொத்தம் 337 ஏரிகள் பராமரிக்கப்படுகின்றன. கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகட்டுகள் உள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 441.00 கி.மீ., நீளமுள்ள 244 வாய்க்கால்கள் மூலம் 337 ஏரிகள் பாசனம் பெறுகின்றன. மேற்படி அணைக்கட்டுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு நீர்வரத்து குறித்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில் ஏரிக்கரை உடைப்பு மற்றும் மதகு நீர் கசிவு அடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு தேவையான மணல் மூட்டைகள், சவுக்கு கழிவுகள், கயிறுகள் தயாராக உள்ளது, வாய்க்கால்கள், ஓடைகளின் குறுக்கே மரங்கள் விழுந்தால் அகற்றுவதற்கு தேவையான எந்திரங்கள், பொக்லைன் எந்திரங்கள், ரம்பங்கள் உள்ளிட்டவைகள் தயாராக உள்ளது.
கள்ளக்குறிச்சி நீர்வளத்துறையில் நிரப்பப்பட்ட பைகள் 10,250, காலியான சிமென்ட் பைகள், 16,000, சவுக்கு குச்சிகள் மற்றும் கழிகள் 5,040 மீ, கயிறு 215 கிலோ, லைட் 14, ரெயின் கோட் 20 மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். டிட்வா புயல் எச்சரிக்கையை முன்னிட்டு கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகளின் நீர் இருப்பினை தற்பொழுது உள்ள அளவைவிட குறைத்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் நீர்வளத்துறையின் சார்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

