/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தர்பூசணியில் செயற்கை நிறமிகள் இல்லை: ஆய்வில் உறுதி
/
தர்பூசணியில் செயற்கை நிறமிகள் இல்லை: ஆய்வில் உறுதி
தர்பூசணியில் செயற்கை நிறமிகள் இல்லை: ஆய்வில் உறுதி
தர்பூசணியில் செயற்கை நிறமிகள் இல்லை: ஆய்வில் உறுதி
ADDED : ஏப் 02, 2025 06:21 AM

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் தர்பூசணியில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தவில்லை, என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில், 650 ஹெக்டர் வயல்வெளியில் தர்பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. இதில் ஐஸ்பாக்ஸ் ரக தர்பூசணி அதிகளவிலும், வரிக்காய் ரகம் குறைந்த அளவிலும் சாகுபடி செய்யப்படுகிறது. தர்பூசணியில் நிறம் மற்றும் சுவையை அதிகரிக்க செயற்கை நிறமிகள் ஊசி மூலம் செலுத்தப்படுவதாக வதந்திகள் பரவி வருகின்றன.
தொடர்ந்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ள விவசாய நிலங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில், செயற்கை நிறமிகள் ஏதும் தர்பூசணியில் பயன்படுத்தவில்லை என உறுதி செய்யப்பட்டது.
அதனால் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளை நம்பவேண்டாம். கோடையில் சத்து மிகுந்த தர்பூசணி பழங்களை எவ்வித அச்சமுமின்றி வாங்கி உண்ண வேண்டும்.
இதன்மூலம் தர்பூசணி பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

