/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அனைவருக்கும் எளிய வகையில் நீதி கிடைத்திட பணியாற்றுகிறோம்: ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா பெருமிதம்
/
அனைவருக்கும் எளிய வகையில் நீதி கிடைத்திட பணியாற்றுகிறோம்: ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா பெருமிதம்
அனைவருக்கும் எளிய வகையில் நீதி கிடைத்திட பணியாற்றுகிறோம்: ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா பெருமிதம்
அனைவருக்கும் எளிய வகையில் நீதி கிடைத்திட பணியாற்றுகிறோம்: ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா பெருமிதம்
ADDED : ஜன 25, 2024 11:50 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற துவக்க விழா நேற்று நடந்தது.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா தலைமை தாங்கி மாவட்ட கோர்ட்களை துவக்கி வைத்தார். ஐகோர்ட் நீதிபதிகள் சுந்தர், தண்டபாணி, கிருஷ்ணன் ராமசாமி, பரதசக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா வரவேற்றார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக இருசன்பூங்குழலி, தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதியாக ஸ்ரீராம் ஆகியோர் பொறுப்பேற்று பணிகளை தொடர்ந்தனர். தொடர்ந்து ஏ.என்.பி., மகாலில் நடந்த துவக்க விழாவில் கலெக்டர் ஷ்ரவன்குமார், எஸ்.பி., சமய்சிங்மீனா, கள்ளக்குறிச்சி 3வது கூடுதல் அமர்வு நீதிபதி கீதாராணி, எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், செந்தில்குமார்.
கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்க செயலாளர் சீனிவாசன், பொருளாளர் தியாகராஜன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டு வரும் வெங்கடாசலம் உள்ளிட்டவர்களுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சால்வை அணிவித்து பாராட்டினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பேசுகையில் சென்னை ஐகோர்ட் வழிகாட்டுதல்படி புதிய மாவட்ட நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மக்களுக்கு நீதி கிடைத்திடும் வகையில் பல்வேறு பணிகளை செய்து வருகின்றன. அதன்படி நீதிமன்றங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை கூறியுள்ளனர். அனைத்தும் அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா கள்ளக்குறிச்சி மாவட்டம் சுதந்திரமான நீதித்துறை மாவட்டமாக இன்று முதல் மாற்றம் பெற்றுள்ளது. இங்குள்ள அனைவருக்கும் எளிய வகையில் நீதி கிடைத்திடவே நாம் பணியாற்றுகிறோம். அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய நீதி கிடைத்திடவே நீதிமன்றங்கள் செயல்படுகிறது. இதை அடுத்து வரும் தலைமுறை வழக்கறிஞர்கள் முக்கிய நோக்கமாக கொண்டு பணியாற்றிட வேண்டும் என கூறினார்.
விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி புஷ்பராணி நன்றி கூறினார்.

