தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கல்யாண வைபவம்

திருக்கல்யாண வைபவம்

திருக்கல்யாண வைபவம்


ADDED : செப் 28, 2025 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2025 03:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜை, 6:45 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி கண்ணாடி அறை மண்டபத்தில் எழுந்தருளினார்.

காலை 11:30 மணிக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

மூலவர் உலகளந்த பெருமாள் கல்பதித்த சங்கு சக்கரம், கர்ண பத்திரம், காசு மாலை, மாங்காய் மாலை சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் அருள் பாலித்தார். மாலை 6:00 மணிக்கு சுவாமி ஊஞ்சல் சேவை நடந்தது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகளன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us