
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நந்தி பெருமான் திருக்கல்யாணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி சாமியார் மடம் திருநீற்றம்மை உடனருள் செம்பொற்சோதிநாதர் கோவிலில் நந்தியம்பெருமானுக்கும், சுயசாம்பிகை தேவியாருக்கும், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
திருநாவுக்கரசு திருமடம் உழவார திருக்கூட்டம் சார்பில் நடந்த வழிபாடுகளை சிவனடியார் நாச்சியப்பன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். திருவாசகம் முற்றோதல் செய்யப்பட்டது.
நிறைவாக அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

