/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் எடை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் எடை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் எடை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் எடை பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 02, 2025 07:18 AM

திருக்கோவிலூர் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் எடை பணியாளர்கள் இ-நாம் திட்டத்தில் செயல்படுத்தப்படும் புதிய நடைமுறையை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளுக்கு பண பட்டுவாடா செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படுவதை கண்டித்து, அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில், ஒழுங்குமுறை விற்பனை கூட எடை பணி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத் தலைவர் பழனி வரவேற்றார். செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகன், துணைத்தலைவர் செந்தில், மாநில பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.
சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன் பேசுகையில்; இ-நாம் திட்டத்தில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட ஏழு மாவட்ட கமிட்டிகளில் அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட் கமிட்டியின் செயல்முறைகள் பாதிக்கப்பட்டு, சிறு வியாபாரிகளின் தொழில் முற்றிலும் முடங்கிப் போவதுடன், வேளாண் விற்பனை குழுவின் மறைமுக ஏல முறை மறைந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழி வகுத்து விடும்.
இதனை கண்டித்து வியாபாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எடைப்பணி தொழிலாளர்களின் பணி பாதிப்பதுடன், வியாபாரிகள் கோரிக்கையை ஆதரித்து போராட்டம் நடத்தப்படுகிறது.
இதில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் கலெக்டர் அலுவலகம் முன்பாக வரும் 7ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கும் என தெரிவித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் கலியபெருமாள், வழக்கறிஞர் அயோத்தி உள்ளிட்ட எடைப்பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.