ADDED : ஏப் 07, 2026 11:09 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வெல்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூரை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சங்கர்குமார், 28; வெல்டர். இவருக்கும், எடப்பாடியை சேர்ந்த சுப்ரமணி மகள் கலைவாணி, 28; என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய கலைவாணி கடந்த சில மாதங்களுக்கு முன் பணியில் இருந்து நின்று விட்டார். நிறுவனத்தில் இருந்து வர வேண்டிய போனஸ் தொகை 12,218 ரூபாய் கலைவாணிக்கு கொடுக்கவில்லை. இந்த பணத்தை தருமாறு பல முறை கேட்டும் நிறுவனம் வழங்கவில்லை. இதனால் மனமுடைந்த சங்கர்குமார் நேற்று முன்தினம் தனது வீட்டில் உள்ள துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
