ADDED : நவ 18, 2024 05:20 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே வெல்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி பகுதியில் பெரியாயி அம்மன் கோவில் அருகே உள்ள வேப்பமரத்தில் ஒருவர் துாக்கில் தொங்கி இறந்திருப்பதாக கள்ளக்குறிச்சி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதில், இறந்தவர் கள்ளக்குறிச்சி அண்ணா நகரைச் சேர்ந்த முருகன், 55; வெல்டர் என்பது தெரியவந்தது. உடலை மீட்டு முருகன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
