UPDATED : அக் 17, 2026 04:18 PM
ADDED : அக் 17, 2026 04:16 PM

அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி சார்பில், சுய தொழில் செய்பவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
திருக்கோவிலுாரில் நடந்த விழாவிற்கு, தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் செந்தில்குமார், செயலாளர் கார்த்திக்ராம், பொருளாளர் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தனர்.
கிளப் உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
