/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : பிப் 17, 2025 11:55 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். 6 மாற்றுத் திறனாளிகளுக்கு 6 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஸ்கூட்டர் வழங்கினார்.
கூட்டத்தில், வருவாய்த்துறை சார்ந்த நிலப்பட்டா குறைகள், பட்டா மாற்றம், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 529 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்களின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.